Join Whatsapp Group

Join Telegram Group

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை – தமிழக அரசு

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு
எச்சரிக்கைதமிழக அரசு

கிரிப்டோ கரன்சி மோசடியில் கட்டாயப்படுத்தப்படுவதாக
புகாரை
தொடர்ந்து,
வெளிநாடுகளுக்கு
வேலைக்கு
செல்லும்
இளைஞர்கள்
எச்சரிக்கையுடன்
செல்ல
வேண்டும்
என்று
அரசு
எச்சரித்துள்ளது.

சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டை சேர்ந்த  தொழிநுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர்  மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்
எக்ஸ்கியுட்டிவ்
வேலை,
அதிக
சம்பளம்
என
சுற்றுலா
விசாவில்
ஏமாற்றி
அழைத்துச்
சென்று
கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் கட்டாயப்படுத்தி
ஈடுபடுத்தப்படுவதாகவும்
அதனை
செய்ய
மறுக்கும்
நிலையில்
அவர்கள்
துன்புறுத்தப்படுவதாகவும்
தொடர்ந்து
தகவல்
பெறப்படுகிறது.

இதனால் வெளிநாடுகளுக்கு
வேலை
நிமித்தமாக
செல்லும்
இளைஞர்கள்
ஒன்றிய
அரசில்
பதிவு
செய்யப்பட்ட
முகவர்கள்
மூலம்,
வேலைக்கான
விசா,
முறையான
பணி
ஒப்பந்தம்,
என்ன
பணி
முதலிய
விவரங்களைச்
சரிபார்க்க
தமிழ்நாடு
அரசு
அல்லது
சம்பந்தப்பட்ட
நாட்டில்
உள்ள
இந்திய  தூதரகங்களை தொடர்பு கொண்டு விவரம் அறிய வேண்டும்.

நிறுவனங்களின்
உண்மைத்
தன்மையை
உறுதி
செய்து
கொண்டும்,
ஒன்றிய
அரசின்
வெளியுறவுத்துறை
மற்றும்
வேலைக்குச்
செல்லும்
நாடுகளிலுள்ள
இந்திய
துாதரகங்களின்
இணையதளங்களில்
வெளியிடப்படும்
அறிவுரைகளின்படியும்,
வெளிநாட்டு
வேலைக்கு
செல்ல
வேண்டும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு
உதவி
தேவைப்படின் 9600023645, 8760248625,
044-28515288
என்ற
தொலைப்பேசி
எண்ணினை
தொடர்பு
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]