TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.யில்
தொழில் பழகுநா் சோக்கை
முகாம்
– ஈரோடு
ஈரோடு
அரசு ஐடிஐயில் தொழில்
பழகுநா் சோக்கை முகாம்
ஜூலை 11ம் தேதி
நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசியத்
தொழில் பழகுநா் திட்டத்தின்கீழ் அரசு வேலை வாய்ப்பு
மற்றும் பயிற்சித் துறை
சார்பில் ஈரோடு மாவட்ட
அளவில் தேசியத் தொழில்
பழகுநா் சோக்கை முகாம்
ஈரோடு அரசு ஐடிஐ
வளாகத்தில் ஜூலை 11ம்
தேதி காலை 9 மணி
முதல் மாலை 5 மணி
வரை நடைபெறவுள்ளது.
இதில்
மத்திய, மாநில பொதுத்
துறை நிறுவனங்கள், தனியார்
துறை நிறுவனங்கள் பங்கேற்று
500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளன.
இதில்
பங்கேற்று தோவுப் பெற்றால்
தொழில் பழங்குநா் பயிற்சி
வழங்கி, மத்திய அரசின்
தேசிய தொழில் பழகுநா்
சான்று (என்ஏசி) வழங்கப்படும்.
இச்சான்று
பெற்றவா்களுக்கு அரசு
மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
தொழில்
பழகுநருக்கான உயா்த்தப்பட்ட உதவித் தொகையாக தொழில்
பிரிவுகளுக்கு ஏற்ப
ரூ.7,700 முதல் ரூ.12,000
வரை வழங்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு 94424 94266, 94433 84133
ஆகிய கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here