TAMIL MIXER EDUCATION-ன்
பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டசெய்திகள்
PMEGP தொழில்
கடன் திட்டத்தில் புதிய
அறிவிப்பு
பிரதமர்
மோடியின் வேலைவாய்ப்பு பெருக்கத்
திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.)
கீழ் தற்போது கிராமம்,
நகர்ப்புறம் பேதமின்றி அனைத்து
இடங்களிலும் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.
கே.வி.ஐ.சி. இயக்குனர் கூறியதாவது:
ஆணையத்திற்கு உட்பட்ட 11 மாவட்டங்களில் 276 புதிய
தொழில்கள் தொடங்குவதற்கு மானியம்
மட்டும் ரூ.8.68 கோடியை
மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
பெண்களுக்கு 30 சதவீதம், எஸ்.சி.,
15, எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய
அறிவிப்பின் படி அமைப்பு
மற்றும் குழுவாக தொழில்
தொடங்க முடியாது. தனிநபர்
மட்டுமே மானியம் பெற
முடியும்.
தற்போது
ஆடு, மாடு, கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, மீன்வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பிற்கும் மானியம் வழங்கப்படுகிறது. தொழிலை
நகரம், கிராமம் எங்கு
வேண்டுமானாலும் தொடங்கலாம்.
நகரத்தில்
தொடங்கினால் 15 முதல் 25 சதவீதம்,
கிராமத்தில் என்றால் 25 முதல்
35 சதவீதம் வரை மானியம்
உண்டு.ரூ.50 லட்சம்
வரையிலான முதலீட்டில் உற்பத்தித் தொழில் தொடங்கினால் ரூ.17.5லட்சம்
மானியம். ரூ.20 லட்சம்
வரையான முதலீட்டில் சேவைத்தொழில்களுக்கு ரூ.7 லட்சம்
மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயம்
சார்ந்த தொழில்கள் செய்வதற்கும் மானியம் வழங்கப்படுவதால் இளைஞர்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here