கோவை மாவட்டத்தில் வாகனங்கள் ஜன.5ம்
தேதி ஏலம்
கோவை
மாவட்ட போலீசார் பயன்படுத்திய பழைய, இரண்டு, நான்கு
சக்கர வாகனங்கள் ஏலத்தில்
விடப்படுகின்றன.
கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை
மாவட்ட போலீசார், பாதுகாப்பு, ரோந்து பணிக்கு, இரண்டு
மற்றும் நான்கு சக்கர
வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில்
தற்போது பயன்பாட்டில் இருந்து
நீக்கப்பட்ட, 25 நான்கு சக்கர
வாகனங்கள், 21 இரு சக்கர
வாகனங்கள் என,மொத்தம்,
46 வாகனங்கள் பி.ஆர்.எஸ்.,
ஆயுதப்படை மைதானத்தில்,வரும்,
ஜன., 5ம் தேதி
ஏலம் விடப்படுகிறது.
ஏலம்
எடுக்க விருப்பமுள்ளவர்கள், வாகனங்களை
நேரில் பார்வையிட்டு, இருசக்கர
வாகனங்களுக்கு ஆயிரம்
ரூபாயும், நான்கு சக்கர
வாகனங்களுக்கு இரண்டாயிரம் ரூபாயும் செலுத்தி, பதிவு
செய்து கொள்ள வேண்டும்.