தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கு ஆதார்
அட்டை
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ்
உள்ள தபால் நிலையங்களில், குழந்தைகளுக்கு ஆதார்
அட்டை எடுத்து கொள்ளலாம்
என, அஞ்சல் துறை
தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் இருக்கும்,
தலைமை தபால் நிலையம்
மற்றும் துணை தபால்
நிலையங்களில், ஆதார்
அட்டை எடுக்கும் பணி
நடந்து வருகிறது.
இதில்,
18 வயது நிரம்பியவர்களுக்கு, புதிய
ஆதார் அட்டை மற்றும்
ஆதார் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அங்கன்வாடி மையங்களில் படிக்கும்
குழந்தைகளுக்கும், ஆதார்
அட்டை அவசியமாக எடுக்க
வேண்டும் என, அரசு
அறிவுரை வழங்கியது.
இந்த
அறிவுரைபடி, பொது சேவை
மையங்கள் மற்றும் அரசு
இ – சேவை மையங்களில், ஆதார் அட்டை எடுக்கும்
பணி துவக்கப்பட்டு உள்ளது.அந்த
வரிசையில், காஞ்சிபுரம் அஞ்சல்
கோட்டத்தில் இருக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தபால்
நிலையங்களிலும், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும்
வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த
டிசம்பர் மாதம் வரையில்,
701 குழந்தைகளுக்கு, ஆதார்
அட்டை எடுக்கப்பட்டுள்ளன. இனி,
தலைமை தபால் நிலையங்களிலும், குழந்தைகளுக்கு, ஆதார்
அட்டை எடுத்து பொது
மக்கள் பயன் பெறலாம்.