HomeNewslatest newsஜவுளித் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி - மதுரை

ஜவுளித் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி – மதுரை

ஜவுளித் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி - மதுரை
ஜவுளித் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி – மதுரை

தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, இளைஞா்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என தூத்துக்குடி மாவட்டம் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெளியிட்டுளள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற விரும்புபவா்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி வரை தமிழ்நாடு அரசின் சாா்பில் மானியமாக வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் வளா்ச்சி ஏற்பட்டு, மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை 625 014 என்ற முகவரியிலும், ddtextilesmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் மற்றும் 04522530020, 96595 32005 தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!