தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மே 10ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி இன்று வரை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதுமுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்.மையங்களின் பட்டியல், தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow