ரூர்பன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுக்கான பயிற்சி
மையம்
சிவகங்கையில் ரூர்பன் திட்டத்தின் கீழ்
மத்திய, மாநில அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி
மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூர்பன்
திட்டத்தின் கீழ் படித்த
இளைஞர்கள் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் இலவச
பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில
அரசுப்பணிக்கு நடக்கும்
போட்டித்தேர்வுகளுக்கு தயார்
படுத்தும் வகையில் ஊரகப்பகுதிக்கு அருகாமையில் உள்ளது.
காஞ்சிரங்கால் ஊராட்சி நுாலகத்தில் தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார
இயக்கத்தின் வாயிலாக தேசிய
ரூர்பன் திட்ட போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏழை,
எளிய மாணவர்கள் பயன்
பெறும் வகையில் இலவசமாக
வாராந்திர வகுப்பும், மாதிரி
தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில்
TNPSC Group 2, Group
4, தேர்வுகளுக்கு படித்து
வரும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
போட்டித்தேர்வில் வெற்றி பெற்று
பணிக்கு வந்துள்ள அரசு
ஊழியர்களைக்கொண்டு பயிற்சி
மையம் நடத்தப்பட்டு வருகிறது.
விபரத்திற்கு ஆர்.ராதாகிருஷ்ணனை 99656 81698 ல்
தொடர்பு கொள்ளலாம்.