போட்டித் தேர்வுக்கு இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து போட்டித்
தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போருக்கு வேலை
வாய்ப்பு அலுவலகம் சார்பில்
இலவச சிறப்பு பயிற்சி
வகுப்புகள் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலக
தன்னார்வ பயிலும் வட்டம்
சார்பில் மத்திய, மாநில
அரசுகள் நடத்தும் போட்டித்
தேர்வுகளுக்கு சிறப்பு
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது
தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தேர்வு வாரியத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு
group 1, 2 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ
பயிலும் வட்டம் சார்பில்
இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
போட்டித்
தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9487375737 ஆகிய
கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பதிவு செய்யலாம்.