Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

8 AM Headlines: (18.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

Bharani· 2 min readபகிர ↗

8 AM Headlines: (18.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

தமிழ்நாடு:

  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் – படையல் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த கூட்டம்
  • தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சரை இன்று சந்திகிறது தமிழக குழு – அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்ற குழுவில் 14 பேர் இடம்பெற்றுள்ளனர்
  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது – காணொலி வாயிலாக நடைபெறும் என தகவல்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநாகரில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் போலீசார்

இந்தியா:

  • பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் – அறிவிக்கப்படாத முக்கிய மசோதக்கல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு
  • மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் இன்று இந்தியா பிரதிநிதிகளின் கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒற்றுமையாக எதிர்கொளுவது குறித்து ஆலோசனை
  • கவிஞர் ரவீந்திராத் தாகூரால் உருவாக்கப்பட்ட மேற்குவங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைந்தது
  • டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை
  • மகளிருக்கு மாதம் ரூ.2500, ரூ.500 சமையல் சிலிண்டர், வீட்டுமனையுடன் ரூ.5 லட்சம் நிதியுதவி – தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளால் மக்கள் மகிழ்ச்சி
  • நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்

உலகம்:

  • ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரிய அதிபர் – முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தானதாக தகவல்
  • புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா
  • அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் – விவேக் ராமசாமி பேச்சு
  • வங்கதேசத்தில் அதிர்ச்சி – டெங்கு பாதிப்புக்கு 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
  • சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு

விளையாட்டு:

  • 8வது முறையாக ஆசியக்கோப்பையை வென்று இந்திய அணி சாம்பியன் – இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அசத்தல்
  • ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத்தொகையை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய இந்திய வீரர் முகமது சிராஜ் – குவியும் பாராட்டுகள்
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் – மொராக்கோவை வீழ்த்திய இந்தியா – வெற்ற்யுடன் விடைபெற்றார் போபண்ணா
  • 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றி அசத்தல்
  • உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் விவரங்களை அறிவித்தது இங்கிலாந்து அணி – கடந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
  • உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி – தங்கம் வென்றால் இளவேனில் வாலறிவன்

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (19-09-2023)

Job Details Link
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடம் Apply Here
RNSB வங்கியில் Apprentice வேலைவாய்ப்பு Apply Here
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teachers வேலைவாய்ப்பு Apply Here
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மருந்தாளுனர் வேலைவாய்ப்பு Apply Here
கோயம்புத்தூர் அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் Apply Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here