இந்திய பயணிகளுக்கு தற்காலிக தடை – நியூஸிலாந்து அறிவிப்பு
கடந்த
ஆண்டு மார்ச் மாதம்
முதல் இந்தியாவில் கொரோனா
நோய்த்தொற்று அதிகமான
அளவில் கண்டறியப்பட்டது. இதனால்
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால்
நாட்டில் போக்குவரத்து சேவை
மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்பு நாளடைவில் கொரோனா
பாதிப்பு குறைந்து வந்ததால்
நாட்டில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது நாட்டில்
கொரோனாவின் இரண்டாவது அலை
மிக தீவிரமாக இருந்து
வருகிறது.
கடந்த
ஆண்டை விட தற்போது
நாட்டில் மிக அதிமாக
கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் நாடு
முழுவதும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலக
அளவில் அதிக கொரோனா
தொற்று கண்டறியப்படும் நாடுகளின்
பட்டியலில் இந்தியா மூன்றாவது
இடத்தில் உள்ளது. முதல்
இரண்டு இடங்களில் அமெரிக்கா,
பிரேசில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நியூஸிலாந்து அரசு
இந்தியர்கள் வருகைக்கு தடை
விதித்துள்ளது. இது
குறித்து அந்நாட்டு பிரதமர்
ஜெசிந்தா ஆர்டன் கூறுகையில், இந்தியாவில் இருந்து நியூஸிலாந்திற்கு வருபவர்களில் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஏப்ரல்
11ம் தேதி முதல்
ஏப்ரல் 28ம் தேதி
வரை இந்திய பயணிகள்
மற்றும் இந்தியாவில் உள்ள
தங்கள் நாட்டு குடிமக்கள் நியூஸிலாந்திற்கு வருவதற்கு
தடை என்று தெரிவித்துள்ளார்.