அரியரில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா – சென்னை பல்கலை
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் கொரோனா
தாக்கம் காரணமாக பள்ளி,
கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன்
மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும்
கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் தவிர அனைத்து
தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக தமிழக
அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த
அறிவிப்பு பல்கலைக்கழக மானிய
குழு விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும், மாணவர்களுக்கு ஆன்லைன்
மூலமாகவும் கட்டாயம் தேர்வு
நடத்தப்பட வேண்டும் எனவும்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மேலும்
இந்த வழக்கு குறித்து
விசாரித்த நீதிமன்றம் தமிழக
அரசு அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது குறித்தும், அதில் தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் குறித்தும் பதிலளிக்க
வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த
வழக்கில் தமிழக அரசும்,
பல்கலைக்கழக மாநில குழுவும்
கலந்து ஆலோசனை நடத்தப்பட
வேண்டும் எனவும், இதுகுறித்த வழக்கு விசாரணையை ஏப்ரல்
15 ஆம் தேதிக்கு தள்ளி
வைக்கப்பட வேண்டும் எனவும்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு
அரியர் தேர்வுகளில் தேர்ச்சி
பெற்ற சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளதாக
பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி
தெரிவித்துள்ளார்.