TAMIL
MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
திராட்சை விவசாயிகளுக்கு காணொலி மூலம் தொழில்நுட்ப கருத்தரங்கு
கம்பம்
பள்ளத்தாக்கில் ஏற்றுமதி
ரக திராட்சை சாகுபடி,
பன்னீர் திராட்சையில் புதிய
தொழில் நுட்பங்களை கையாழ்வது
குறித்து விவசாயிகளுக்கு காணொலியில் ஜூலை 13ல் பயிற்சி
வழங்கப்படுகிறது.
கம்பம்
பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. ஏற்றுமதி ரகம், ஒயின்
தயாரிப்பிற்கான ரகம்
சாகுபடி முயற்சியை விவசாயிகள் கைவிட்டனர்.
மீண்டும்
ஏற்றுமதி ரக திராட்சை,
பன்னீர் திராட்சை சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்
நுட்பங்களை பயன்படுத்தி அதிக
மகசூல், நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல் வழிமுறைகளை விவசாயிகளுக்கு விளக்க
திராட்சை ஆராய்ச்சி நிலையம்
முடிவு செய்துள்ளது.
இது குறித்து திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் கூறியதாவது:
ஏற்றுமதி
ரக சாகுபடி, பன்னீர்
திராட்சையில் மேம்பட்ட
தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து காணொலி கருத்தரங்கு ஜூலை 13ல் நடக்கிறது.
புனே
தேசிய திராட்சை ஆராய்ச்சி
நிலைய இயக்குனர் சோம்
குவார், பெங்களூரு தேசிய
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய
முதுநிலை விஞ்ஞானி பிரக்திஷா,
கோவை வேளாண் பல்கலை
முதல்வர் ஐரின் வேதமணி
ஆலோசனை வழங்குகின்றனர்.
விவசாயிகள் ஆனைமலையன்பட்டி திராட்சை
ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து
பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here