TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
நாகா்கோவிலில் தேசிய
தொழில்பழகுநா் முகாம் – உதவித்தொகையுடன் பயிற்சி
பயிற்சித்
துறை, மண்டல திறன்
மேம்பாடு, தொழில் முனைவோர்
இயக்குநரகம் ஆகியவை இணைந்து,
பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் முகாமை நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசு ஐடிஐயில் திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு
நடத்துகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடத்தப்படும் இம்முகாமில் மத்திய, மாநில
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்
தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தொழில்பயிற்சி பெற விரும்பும் ஐ.டி.ஐ.
தோச்சி பெற்றவா்கள், தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க விரும்பும் தொழில்நிறுவனங்கள் கலந்து
கொள்ளலாம்.
இதில்,
பங்கேற்று தோவுபெறும் ஓராண்டு
தொழில்பிரிவுகளில் பயிற்சியை
நிறைவுசெய்வோருக்கு குறைந்தபட்சம் ரூ.7,700, இரு ஆண்டுகள்
எனில் ரூ.8,050 பயிற்சிக்
காலத்தில் உதவித் தொகையாக
அந்தந்த நிறுவனங்கள் வழங்கும்.
இறுதியில்
உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநா் சான்று வழங்கப்படும். இது
பொதுத்துறை மற்றும் பெரிய
தொழில்நிறுவன வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற
உதவியாக இருக்கும்.
மேலும்,
தொழிற்பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில்
25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.1,500 வீதம் ஊக்கத்
தொகை கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய
அரசால் வழங்கப்படும்.
எனவே,
ஐடிஐ முடித்தவா்கள் மற்றும்
தொழில் நிறுவனங்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here