காவலர் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகம் ஏற்பாடுசெய்து வருகிறது.
டி.எஸ்.பி., கீதா கூறுகையில்: பெரியகுளம் சப்- டிவிஷன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து காவலர் பணி தேர்விற்கான இலவச நேரடி வகுப்பு நடத்த உள்ளோம்.
காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பயிற்சியில் சேர ஆர்வம் இருந்தால் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இன்று செப்.14, முதல் செப்.17 வரை 94981 01575 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விபரம் முகவரி தெரிவிக்க வேண்டும் என்றார்.