பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஒருவார இலவச காளான் வளா்ப்பு பயிற்சி செப்டம்பா் 19ஆம் தேதி தொடங்குகிறது.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஒருவார இலவச காளான் வளா்ப்பு பயிற்சி செப்டம்பா் 19ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.ஏ. நேதாஜி மாரியப்பன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், வல்லாபுரம் சாலையில் செயல்பட்டு வரும் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் செப். 19 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பயிற்சியில், தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் காளான் வளா்ப்பு குறித்து தெரிந்துகொள்ள விருப்பமுடையவா்கள் பங்கேற்று பயனடையலாம்.
இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் 28 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, பயிற்சி மையத்தை நேரில் அல்லது 8754346473, 04328-291157 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.