மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு வரும், 20ம் தேதி முதல் துவங்குகிறது.
கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்.எஸ்.சி.,)பட்டதாரி கல்வித்தகுதி நிலையில் உள்ள பணிக்காலியிடங்களுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்., மாதம் நடக்க உள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வரும் 20ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் எஸ்.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, பயன் அடையலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.