புதிதாக தொழில்
துவங்க மானியத்துடன் கடனுதவி
புதிய
தொழில்கள் துவங்க, மானியத்துடன் கூடிய கடனுதவி பெற
பிளஸ்
2
தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை
கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய
தொழில் முனைவோர் மற்றும்
தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் படித்த
முதல் தலைமுறை இளைஞர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல்,
5 கோடி ரூபாய் வரை
திட்ட மதிப்பீட்டு தொகை
உள்ள உற்பத்தி மற்றும்
சேவை தொழில்களை துவக்கலாம்.இதற்காக தமிழக அரசு,
25 சதவீதம் மானியம் அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய், 3 சதவீத
பின்முனை வட்டி மானியமும்
வழங்குகிறது.
தகுதியுள்ள பட்டியலினம், பழங்குடியினர் மற்றும்
மாற்றுத்திறனாளி தொழில்
முனைவோருக்கு, 10 சதவீதம்
கூடுதல் முதலீட்டு மானியம்
வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம், 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது பொதுப்பிரிவினருக்கு, 35 வயதாகவும், சிறப்பு
பிரிவினருக்கு 45 வயதாகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச கல்வி தகுதியாக, பிளஸ்2
தேர்ச்சி, பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/ஐ.டி.ஐ.,/
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி
நிறுவனத்தின் மூலம்
தொழில்சார் பயிற்சி தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு, 18 சதவீதம்,
பழங்குடியினருக்கு, 1 சதவீதம்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம்,
மகளிருக்கு(மேற்கண்ட தகுதிகளுடன் உள்ள ஆதரவற்ற/கைவிடப்பட்ட மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து)
50 சதவீத இட ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.இந்த
ஒதுக்கீடுகளில் தேவையான
நபர்கள் இல்லாதபட்சத்தில், இதர
பிரிவினரிலிருந்து தகுதிகளுடன் கூடிய நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். புதியதாக
துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இதில் பயன்பெற, www.msmetamilnadu.tn.gov.in என்ற
இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.