கல்வி உதவித்தொகை மார்ச் 5ல் தேர்வு
எட்டாம்
வகுப்பு மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை திறன் தேர்வு,
மார்ச் 5ல் நடக்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும்
எட்டாம் வகுப்பு மாணவர்கள்,
கல்வி உதவித் தொகை
பெறுவதற்கான, தேசிய வருவாய்
வழி மற்றும் திறன்
தேர்வு, மார்ச் 5ம்
தேதி நடக்க உள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்க
விரும்பும் மாணவர்கள் வரும்
27ம் தேதி வரை,
www.dge.tn.gov.in என்ற
இணையதளம் வழியாக விண்ணப்ப
படிவங்களை பதிவிறக்கலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 50 ரூபாய்
கட்டணம் செலுத்தி, 27ம்
தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது
பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.