Join Whatsapp Group

Join Telegram Group

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் கருத்தரங்கம்: இணைய வழியில் நடக்கிறது

By admin

Updated on:

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் கருத்தரங்கம்: இணைய வழியில் நடக்கிறது

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த 3 நாள்கள் (அரைநாள்) இணையவழி கருத்தரங்கை, வரும் ஜன 20 முதல் 22ம் தேதி வரையும், 15 நாள்கள் (அரை நாள்மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தொழில்முனைவோர் மேம்பாடு பயிற்சியை திங்கள்கிழமை (ஜன.17) முதல் பிப் 2ம் தேதி வரையும் நடத்த உள்ளது.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர், அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியை நேரிலோ அல்லது 86681 02600, 94445 57654, 044 2225 2081 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]