இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு ஆதார் முகாம்
இந்திய
அஞ்சல் துறை சார்பில்
சிறப்பு ஆதார் முகாம்
வரும் 22 முதல் 27-ம்
தேதி வரை நடைபெற
உள்ளது.
இந்த
முகாமில் புதிதாக ஆதார்
எடுக்க கட்டணம் கிடையாது.
ஆதார் திருத்தம் செய்ய
மட்டும் ரூ.50 கட்டணம்
வசூலிக்கப்படும். மேலும்,
ஆதார் அட்டையில் பிறந்த
தேதி மாற்றம், முகவரி
மாற்றம், செல்பேசி எண்
சேர்த்தல் மற்றும் மாற்றம்
செய்தல் உள்ளிட்ட சேவைகள்
வழங்கப்படும்
இந்த
சேவைகளைப் பெற வாக்காளர்
அடையாள அட்டை, பள்ளி
அடையாள அட்டை, வங்கி
பாஸ் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்
உள்ளிட்டவற்றின் அசல்
ஆவணத்தைக் கொண்டு வர
வேண்டும்.
இதுகுறித்து, மேலும் தகவல் அறிய
அருகில் உள்ள அஞ்சல்
ஆதார் சேவை மையம்
மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.