மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு
கல்வி
பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை
மத்திய அரசுக்கு இணையாக
உயர்த்தி தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய
அரசு வழங்கும் கல்வி
உதவித் தொகைக்கு இணையாக
மாநில அரசும் வழங்கும்
என தமிழக அரசு
மானிய கோரிக்கையின் போது
அறிவித்திருந்தது.
அதனடிப்படையில், பள்ளிக் கல்வி முதல்
உயர்கல்வி வரை பயிலக்கூடிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய
அரசு வழங்கும் உதவித்
தொகைக்கு இணையாக தமிழக
அரசு உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 9 முதல்
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 2,100 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாயாகவும், தினசரி
வீடு சென்று வரும்
மாணவர்களுக்கு 1,200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டிப்ளமோ
பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விடுதியில் தங்கி பயிலும்
மாணவர்களுக்கு 2,700 ரூபாயிலிருந்து 9,500 ரூபாயாகவும், தினசரி
வீடு சென்று வரும்
மாணவர்களுக்கு 1,680 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல,
இளங்கலை மற்றும் முதுகலை
பட்டப்படிப்பு பயிலும்
மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 4,200 ரூபாயிலிருந்து ஆண்டுதோறும் இனி 13,500 ரூபாயாகவும், தினசரி
வீடு சென்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த
ஆண்டுத் தொகை 2,100-ல்
இருந்து இனி 7,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என
அரசு அறிவித்துள்ளது.