கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நாளையும், நாளை மறுதினமும் நடக்கவுள்ளது.
சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு, போன்றவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அதன்படி, பாரம்பரிய உணவுகள், சாறு பிழிதல், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, உடனடி தயார்நிலை உணவுகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.