தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அகரம் அறக்கட்டளை சார்பில் விதை கல்வி உதவி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி:
அகரம் அறக்கட்டளை நிறுவனம், அகரம் விதை திட்டம்-2021 எனும் திட்டத்தினை, இக்கல்வி ஆண்டில் (2020-2021) செயல்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள், பெற்றோர்களை இழந்தவர்கள், வறுமையில் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மேற்படி அகரம் விதைத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க எதுவாக சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளிகளில் கற்றல்/கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.