144 தடை உத்தரவு
– பிரதமர் மோடி நாளை
புதுச்சேரி வருகை
புதுச்சேரியில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம்
6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்படி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் முன்னேற்பாடுகளாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு வார
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில்
போட்டியிடும் அனைத்து
கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு
கட்சிகளும் மற்ற கட்சிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாஜக
வேட்பாளர்களை ஆதரித்து
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நாளை
புதுச்சேரிக்கு வருகை
தரவுள்ளார். இதன்படி புதுச்சேரி ஏஎப்டி மில் திடலில்
நாளை மாலை 4 மணிக்கு
நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
ஆதரவு திரட்ட உள்ளார்
மோடி. இந்த கூட்டத்தில் பங்குபெறும் கூட்டணி கட்சிகள்
மற்றும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை
நடைபெறவுள்ளது.
முன்னதாக
பிரதமர் மோடியின் வருகையை
முன்னிட்டு புதுச்சேரியில் நாளை
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை
ட்ரோன்கள் பறப்பதற்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளதாக பாண்டிச்சேரி மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை
மீறுபவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும்
எச்சரிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் விழா
நடக்கும் இடங்கள், பிரதமர்
செல்லும் பாதைகளில் 5 அடுக்கு
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.