HomeBlogஆசிரியா் தேர்வு வாரிய கால அட்டவணை வெளியீடு
- Advertisment -

ஆசிரியா் தேர்வு வாரிய கால அட்டவணை வெளியீடு

Publication of Teacher Selection Board Schedule

ஆசிரியா் தேர்வு
வாரிய கால அட்டவணை
வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறை ஆகியவற்றில் நிகழாண்டில் 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு
கால அட்டவணையை ஆசிரியா்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியா்
தகுதித் தேர்வு ஏப்ரல்
2-
ஆவது வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TRB ANNUAL PLANNER 2022 – Click Here

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயா்
கல்வித்துறையில் காலியாக
உள்ள ஆசிரியா்கள், விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா்
தேர்வு வாரியம் போட்டித்
தேர்வுகளை நடத்துகிறது. அந்த
வகையில் நிகழாண்டுக்கான தேர்வுக்குரிய கால அட்டவணையை ஆசிரியா்
தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி
முதுநிலை பட்டதாரி ஆசிரியா்
பணியில் 2ஆயிரத்து 407 போ
நியமனம் செய்வதற்கான தேர்வுகள்
பிப்ரவரி 2-ஆவது அல்லது
3-
ஆவது வாரத்தில் நடைபெறும்.
ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம்
வெளியிடப்பட்டு, ஏப்ரல்
2-
ஆவது வாரத்தில் தகுதித்
தேர்வு நடத்தப்படும்.

இடைநிலை
ஆசிரியா் 3902, பட்டதாரி ஆசிரியா்கள் ஆயிரத்து 87 பணியிடம் என
4989
காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம்
வெளியிடப்பட்டு, ஜூன்
மாதம் 2-ஆவது வாரத்தில்
தேர்வு நடத்தப்படும். மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனத்திற்கு 167 விரிவுரையாளா் தேர்வுக்கான அறிவிப்பு மே
மாதம் வெளியிடப்பட்டு, ஜூன்
2-
ஆவது வாரத்தில் தேர்வு
நடத்தப்படும்.

கல்லூரிகளில் காலியாகவுள்ளஅரசு
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம்
வெளியிடப்பட்டு, ஆகஸ்ட்
முதல் வாரத்தில் முதல்
கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 உதவி விரிவுரையாளா் பணிக்கான
அறிவிப்பு ஆகஸ்ட் மாதம்
வெளியிடப்பட்டு, நவம்பா்
2-
ஆவது வாரத்தில் தேர்வு
நடத்தப்படும்.

பொறியியல்
கல்லூரிகளில் உதவிப்
பேராசிரியா் பணியிடத்தில் 104 பேரை
நியமனம் செய்வதற்கான அறிவிப்பு
செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பா் 2வது வாரத்தில்
தேர்வு நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்
தேர்வு வாரியம் மூலம்
9
ஆயிரத்து 494 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு உரிய
கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்டுள்ளார்.

Download TRB ANNUAL PLANNER 2022 – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -