அரசு சார்பில்
இளைஞர்களுக்கு தொழில் தொடங்க
ரூ.4 லட்சம் நிதி
பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தொழில்
முனைவோராக மாற நினைத்தால் அவர்களுக்கான நிதி
உதவி வழங்கப் படுவதாக
தருமபுரி மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி,
பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு
வட்டாரங்களிலுள்ள 24 கிராம
ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டடமானது அனைத்து
கிராமத்துடன் இணைத்து
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில் இளநிலைவேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை
பொறியியல் பட்டப் படிப்பு
படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தில் ஒரு
பயனாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு
லட்சம் வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சம் நிதி
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த
திட்டத்தின் கீழ் இயற்கை
உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்திசெய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமைக்குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனைநிலையம் அமைத்தல், அக்ரிகிளினிக் தொடங்குதல், நுண்ணீர் பாசன
சேவைமையம் தொடங்குதல், வேளாண் விளை
பொருள்கள் ஏற்றுமதி
செய்தல், இதர
வேளாண் தொழில்கள் தொடங்க
நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இந்ததிட்டத்தின் கீழ் பயனடைவதற்கு 21 முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணிகளில் இருக்கக்கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
தொழில் தொடங்கவிரும்பும் வேளாண்பட்டதாரிகள், விரிவான
திட்ட அறிக்கையுடன் கல்விச் சான்றிதழ்கள், குடும்பஅட்டை, வங்கிக் கணக்குபுத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை
இணைத்து வருகிற 03.02.2022 தேதிக்குள் தருமபுரி மாவட்ட
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். திட்டம் தொடர்பான
கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார
வேளாண்மை உதவி இயக்குநரை
தொடர்பு கொள்ளலாம்.