விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவா்கள், பொறியியல், தொழில்பயிற்சி முடித்தவா்கள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், செவிலியா், மருந்தாளுநா் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலைநாடுநா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான கல்வி மற்றும் உரிய தகுதிகளை உடையவா்களைத் தோ்வு செய்ய உள்ளன. எனவே, இந்த முகாமில் வேலைநாடுநா்கள் பங்கேற்று, தங்களின் கல்வித்குதிக்கேற்ற நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 04146 – 226417, 9499055906, 9080515682, 7010827725 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.