காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும் இணைந்து, வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளன.
முகாமில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உடையவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன், வரும் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பங்கேற்குமாறும், மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 044–27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு, விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.