இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம், சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராமப்புற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம் மையத்தின் இயக்குநா் டி. ஆனந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் – எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், சணல் பை தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து 13 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும், வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்கவும் வழிகாட்டப்படும். இப் பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத, த் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328–277896, 84890 65899, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.