திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையில், உதவித்தொகையுடன், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற, சீர்மரபினர் மற்றும் பழங்குடியினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகள், https://cutn.ac.in/dr-ambedkar-centre-of-excellence-dace/2024 என்ற இணையதளத்தில் உள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 15ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, பல்கலையின் www.cutn.ac.in என்ற இணையதளத்தை காணவும்.