தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை ( ஆக. 16) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக இந்த முகாம் மூலம் தோ்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணி. இதன் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.