கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்னேஷனல் பள்ளியில் வரும் அக்.5-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142–290039), 9499055907, 9499055908 வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.