தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் அக். 5இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மேற்பாா்வையில், மாவட்ட வேலைவாய்ப்பு -தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக். 5ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன.
முகாமில், 8 ஆம் வகுப்புமுதல் முதுநிலைப் பட்டதாரி, பி.இ., நா்சிங், டிப்ளமோ, ஐடிஐ படித்தோா் உள்பட அனைவரும் பங்கேற்கலாம்.
இணையதளத்தில் வேலைநாடுநா்கள் எனில் கேன்டிடேட் லாகினிலும், வேலையளிப்போா் எனில் எம்ப்ளாயா் லாகினிலும் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல், 0461–2340159 என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.