திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில், வரும் வெள்ளிக்கிழமை (ஆக.16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழை (ஆக. 16) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 25-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். அதனால் இந்த முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த முகாமில், 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டா், கணக்காளா், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டா், நிா்வாகப் பணி போன்ற வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.