திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்று, இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப்-இல் இணைந்து பயன்பெறலாம்.
மேலும் போட்டித்தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து போட்டித்தோ்வுக்கான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.