மார்ச் 1 முதல்
10,484 பேருக்கு போலீஸ் அடிப்படை
பயிற்சி ஆரம்பம்
தமிழக
போலீசில் புதிதாக தேர்வு
செய்யப்பட்ட 10,484 பேருக்கு மார்ச்
1 முதல் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இத்துறையில் 7404 ஆண்கள், 3080 பெண்கள்
என மொத்தம் 10484 பேர்
போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு
தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களின்
சம்பளம், சீருடை உள்ளிட்ட
செலவினங்களுக்கு அரசு
ரூ.187.38 கோடி ஒதுக்கீடு
செய்துள்ளது. இவர்களுக்கு மார்ச்
1 முதல் தமிழகம் முழுவதும்
உள்ள 43 போலீஸ் பயிற்சி
பள்ளிகளிலும் சட்ட
நுணுக்கங்கள், பொதுமக்களிடம் பழகும் விதம், கணினி
தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து 7 மாதங்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட உள்ளன.