வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி – மதுரை
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் வாயிலாக
அனைத்து வகையான போட்டி
தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி,
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் TNPSC
குரூப் 2, குரூப் 2ஏ
ஆகிய தேர்வுகளுக்கு 5,529 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி
தேர்விற்கு, மதுரை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மைய
கட்டிடத்தில் கட்டணமில்லா பயிற்சி சிறந்த வல்லுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட
உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட காலவெளி இடையில் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான
பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற இணையதளத்தில் பதிவு
செய்து பதிவிறக்கம் செய்து
பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி
வரை மற்றும் சனி,
ஞாயிறு ஆகிய இரண்டு
பயிற்சி வகுப்புகளாக நடத்தப்பட
உள்ளது. மேலும் இந்த
அலுவலகத்தில் செயல்படும் நூலகத்தில் அனைத்து வகையான
போட்டி தேர்விற்கும் மாணவர்கள்
தயார்படுத்திட ஏதுவாக
புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே,
இந்த அலுவலகத்தில் நடைபெறும்
கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்
கலந்து கொள்ள விருப்பம்
உள்ள பட்டப்படிப்பு முடித்த
மனுதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று,
ஆதார் அட்டை நகல்
மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தில் ஒரு
முறை பதிவு (One time
Registration) செய்து இருப்பின், அதன்
நகலுடன், மதுரை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
இத்தகவலை துணை இயக்குநர்
மகாலெட்சுமி தெரிவித்துள்ளார்.