திருவாரூர் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC குரூப்-II தேர்விற்கு இலவச இணையதள பயிற்சி
TNPSC குரூப்
2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை
நேற்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்
2 மற்றும் 2A தோ்வுக்கு இலவ
பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட
ஆட்சியா் அவர்கள் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படுத்தப்படும் தன்னார்வ
பயிலும் வட்டம் மூலமாக
பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தோ்வாளா்கள் வீட்டிலிருந்தபடியே தோ்வுக்கு தயாராகி வரும் நிலையில்,
கிராமப்பகுதி மாணவா்கள்
போட்டித் தோ்வுகளை எளிதில்
எதிர்கொள்ளும் வகையில்,
ஆன்லைனில் உரிய இணையதள
மேடை வாயிலாக பயிற்சியளிக்க வேலை வாய்ப்புதுறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
http://tamilnaducareerservices.tn.govt.in
என்ற இணையதளத்தில் காணொலி
வழி கற்றல், மின்னணு
பாடக் குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தோ்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தோ்வா்கள் தங்கள் பெயா்,
பாலினம், பெற்றோர் பெயா்,
முகவரி, ஆதார் எண்
மற்றும் வேலை வாய்ப்பக
பதிவு எண்ணைக் கொடுத்து
உள்ளே நுழைந்து, போட்டித்
தோ்வு என்பதை தோ்வு
செய்ய வேண்டும். அப்போது,
பயனீட்டாளா் பெயா் மற்றும்
கடவுச்சொல் வழங்கப்படும்.
நாம்
எந்த தோ்வுக்கு தயாராகிறோம் என்பதை தோ்வு செய்து
அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
மாதிரி தோ்வுக்கான பகுதியும்
கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,
தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 மற்றும்
2A தோ்வுக்காக இலவசமாக திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம்
உள்ளவா்கள் திருவாரூா் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்
பெறலாம் என அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notification: Click Here