விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வரும் 19ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 25 மையங்களில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட உள்ளது.
இதில், ஒரு மையமாக விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் தெருக்கூத்து, பறையாட்டம், பம்பை, மல்லர் கம்பம், ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. வயது வரம்பு 17 வயது முதல், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மட்டுமே.
பயிற்சிகள் வரும் 19ம் தேதி முதல் தொடங்க உள்ளது.ஓராண்டு முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கப்படும். இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சேர்க்கைக்கு, பள்ளி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.