தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2A முதல் நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 18 இன்று முதல் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
சென்னையை சேர்ந்த தகுதியான மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை நேரடியாக எடுத்துச் சென்று அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://decgc.chennai24gmail.com/ என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.