Friday, April 25, 2025
HomeNotesAll Exam Notesஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக்‌ கண்டறிக - TNPSC Notes
- Advertisment -

ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக்‌ கண்டறிக – TNPSC Notes

ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக்‌ கண்டறிக - TNPSC Notes
ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக்‌ கண்டறிக – TNPSC Notes

TNPSC தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? தமிழ் மொழியில் ஒரெழுத்துச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்வது முக்கியமானது.

TNPSC தேர்வுக்கு ஏன் இது முக்கியம்?

  • ஒரெழுத்துச் சொற்கள் தமிழ் இலக்கணத்தில் முக்கியமான பகுதி ஆகும்.
  • TNPSC Group 2, Group 4, VAO உள்ளிட்ட தேர்வுகளில் இது அடிக்கடி கேட்கப்படும் தலைப்பாகும்.
  • விரைவில் நினைவில் கொள்ள எளிய பட்டியல் வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக்‌ கண்டறிக

. எண்எழுத்துபொருள்
1.எட்டு, அழகு, சிவன்‌, திருமால்‌, நான்முகன்‌, சுட்டு, அசை, திப்பிலி, 8 என்ற எனர்‌ வடிவம்‌, சேய்மை
2.ஆச்சாமரம்‌, வியப்பு, பசு, வினா, விடை, சொல்‌, ஒர்‌ இனம்‌, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு, இரக்கம்‌, வியப்பு, துன்பம்‌, மறுப்பு, உருக்கம்‌, இணைப்பு, இச்சை
3.அண்மைச்சுட்டு, இங்கே, இவன்‌, அன்பு, விகுதி, இகழ்ச்சி
4.அம்பு, அழிவு, இந்திரவில்‌, சிறுபறவை, குகை, தாமரை, இதழ்‌, திருமகள்‌, நாமகள்‌, வண்டு, தேன்‌, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு, கொக்கு, பூச்சி
5.சிவபிரான்‌, நான்முகன்‌, உமையவள்‌, ஒர்‌ இடைச்சொல்‌, சுட்டெழுத்து, ஆச்சரியம்‌, உருக்கம்‌
6.உணவு, இறைச்சி, திங்கள்‌, சிவன்‌, ஊன்‌, தசை, உண்ணல்‌, சந்திரன்‌
7.குறி, வினாஎழுத்து
8.இடைச்சொல்‌, சிவன்‌, திருமால்‌, இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல்‌, மேல்நோக்குதல்‌, வினா
9.தலைவன், அசைநிலை, அரசன்‌, அழகு, இருமல்‌, கடவுள்‌, கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கன்னி, சிவன்‌, கிழங்கு, தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை, பெருநோய்‌, ஆசை, வியப்பு, ஐந்து, ஐயம்‌, கணவன்‌, பாஷனம்‌, மென்மை, மேன்மை, மருந்து
10.ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம்‌, மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல்‌, ஐயம்‌, நான்முகம்‌, வினா பரிநிலை, நான்முகன்‌, கொன்றை, ஆபத்து
11.ஒளபாம்பு, நிலம்‌, விழித்தல்‌, அழைத்தல்‌, வியப்பு, தடை, கடிதல்‌, பூமி, ஆனந்தம்‌
12.அரசன்‌, நான்முகன்‌, தீ ஆன்மா, உடல்‌, காற்று, கதிரவன்‌, செல்வன்‌, திருமால்‌, தொனி, நமன்‌, மயில்‌, மனம்‌, மணி, இமயம்‌, திங்கள்‌, உடல்‌, நலம்‌, தலை, திரவியம்‌, நீர்‌, பறவை, ஒளி, முகில்‌, வில்லவன்‌, பொருத்து, வியங்குகோள்‌ விகுதி, பறவை
13.காஅசைச்சொல்‌, காத்தல்‌, காவடி, சோலை, தோட்சுமை, பூந்தோட்டம்‌, பூங்காவனம்‌, காவடித்தணடு, பூ, கலைமகள்‌, நிறை, காவல்‌, செய்‌, வருத்தம்‌, பாதுகாப்பு, வலி, துலாக்கோல்‌
14.கீகிளிக்குரல்‌, தடை, தொனி, நிந்தை, பாவபூமி
15.குகுற்றம்‌, சிறுமை, இகழ்ச்சி, நீக்குதல்‌, நிறம்‌, இண்மை, பூமி, உருபு, சாரியை
16.கூபூமி, பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல்‌, கூவுதல்‌, ஓசைக்குறிப்பு
17.கைஇடம்‌, ஒப்பனை, ஒழுக்கம்‌, காம்பு, கிரணம்‌, செங்கல்‌, கட்சி, கைம்மரம்‌, விசிறிக்காம்பு, படையுறுப்பு, ஆற்றல்‌, ஆள்‌, உலகு, உடன்‌, திங்கள்‌, செய்கை, பகுதி, பிடிப்பு, மரவட்டை, முறை, வரிசை, கரம்‌, சயம்‌, வழக்கம்‌, தங்கை, ஊட்டு, வன்மை, சதுரம்‌, சங்கு, வண்டு, கைத்தலம்‌, அஞ்சலி, கைத்தொழில்‌, கைப்பிடி, அஞ்சலி, விறகு
18.கோஅரசன்‌, அம்பு, வானம்‌, ஆண்மகன்‌, இடியேறு, இலந்தை, ரோமம்‌, கண், எழுது, சந்திரன்‌, கிரணம்‌, சூரியன்‌, திசை, நீர்‌, தேவலோகம்‌, பசு, பூமி, பெரியமலை, தாய்‌, வாணி, மேன்மை, வெளிச்சம்‌, தகப்பன்‌, தலைமை, குயவன்‌, சொல்‌, சாறு, அரசியல்‌, இரங்கல்‌, தொடு, சொர்க்கம்‌, சொல்‌
19.கெளகிருத்தியம்‌, கொல்லு, தீங்கு, வாயால்‌ பற்றுதல்‌
20.சாபேய்‌, இறப்பு, சோர்தல்‌, சாதல்‌, 6 என்ற எண், கழிதல்‌, பேய்‌
21.சீஅடக்கம்‌, இகழ்ச்சி, அலட்சியம்‌, காந்தி, சம்பத்து, கலைமகள்‌, உறக்கம்‌, பார்வதி, பெண்‌, ஒளி, விந்து, கீழ்‌, சளி, சீதேவி, செல்வம்‌, வெறுப்பு
22.சுஅதட்டு, ஒசை, நன்மை, சுகம்‌, விரட்டுதல்‌
23.சூவானவகை
24.சைகைப்பொருள்‌, செல்வம்‌
25.சேஎருது, அழிஞ்சில்‌ மரம்‌, உயர்வு, எதிர்மறை, ஒலிக்குறிப்பு, சிவப்பு, காளை, செங்கோட்டை, சேரான்‌, இடபம்‌
26.சோ
அரண்‌, உமை, வானாசுரன்‌, நகர்‌, வியப்புச்சொல்‌, உமையாள்‌, ஒலி மதில்‌
27.ஞாசுட்டு, பொருத்து
28.குபேரன்‌,நான்முகன்‌
29.தாகொடு, அழிவு, குற்றம்‌, கேடு, கொடியன்‌, தாண்டுதல்‌, பகை, நான்முகம்‌, வலி, வருத்தம்‌, வியாழன்‌, நாசம்‌, வலிமை, குறை, பரப்பு, தருக, தாவுதல்‌
30.தீநெருப்பு, அறிவு, இனிமை, தீமை, உபாயவழி, நரகம்‌, சினம்‌, நஞ்சு, ஞானம்‌, கொடுமை, ஒளி, விளக்கு
31.துஅசைத்தல்‌, அனுபவம்‌, எரித்தல்‌, கெடுத்தல்‌, சேர்மானம்‌, நடத்தல்‌, நிறைத்தல்‌, பிரிவு, வருத்தல்‌, வளர்தல்‌
32.தூசீ, துத்தம்‌, தூய்மை, வெண்மை, தசை, வலிமை, வகை, பற்றுக்கொடு, புள்ளிறகு, பகை, பறவை, இறகு
33.தேதெய்வம்‌, மாடு, அருள்‌, கொள்கை, நாயகன்‌, கடவுள்‌
34.தைமாதம்‌, பூச நாள்‌, மகரராசி, அலங்காரம்‌, மரக்கன்று, ஒரு திங்கள்‌, கூத்தோசை, தைத்தல்‌
35.நாஅயலாள்‌, சுவாலை, திறப்பு, மணி, நாக்கு, வளைவு, பூட்டின்‌, தாழ்‌, நான்கு, சொல்‌, ஊதுவாய்‌
36.சிறப்பு, மிகுதி, இன்பம்‌
37.நெளமரக்கலம்‌, நாவாய்‌, படகு, தெப்பம்‌
38.நீமுன்னிலை, ஒருமை, நீண்ட, நீலம்‌.
39.நுதியானம்‌, நேசம்‌, உபசர்க்கம்‌, தோனி, நிந்தை, புகழ்‌, ஐயம்‌, நேரம்‌
40.நூஎல்‌, யானை, ஆபரணம்‌, நூபுரம்‌
41.நெகனிதல்‌, நெகிழ்தல்‌, வளர்தல்‌, கெடுதல்‌, மெலிதல்‌, பிளத்தல்‌, இளகல்‌
42.நேஅன்பு, அருள்‌, நேயம்‌, அம்பு, நட்பு, உழை
43.நொதுன்பம்‌, நோய்‌, வருத்தம்‌, வளி, மென்மை
44.நோ
நோய்‌, இன்மை, சிதைவு, துக்கம்‌, பலவீனம்‌, இன்பம்‌
45.நைவருந்து, இரக்கம்‌ கொள்‌, சுருங்கு, நைதல்‌
46.காற்று, சாபம்‌, பெருங்காற்று, குடித்தல்‌
47.பாஅழகு, நிழல்‌, பரப்பு, பாட்டு, தூய்மை, காப்பு, கைம்மரம்‌, பாம்பு, பஞ்சு, நூல்‌, பாவு, தேர்தட்டு, பரவுதல்‌
48.பிஅழகு
49.பீபெருமரம்‌, மலம்‌, அச்சம்‌
50.பூஅழகு, இடம்‌, இருக்குதல்‌, இலை, ஒமக்கினி, ஒரு நாகம்‌, கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, பொழிவு, மலர்‌, நிறம்‌, புகர்‌, மென்மை, பூத்தல்‌, பொலிவு
51.பேநுரை, மேகம்‌, அச்சம்‌, இல்லை, பேய்‌, சினம்‌
52.பைகைப்பை, பசுமை, அழகு, குடர்‌, சாக்கு, நிறம்‌, பாம்பின்‌ படம்‌, மந்தகுணம்‌, மெத்தனம்‌, இளமை, உடல்‌, வில்‌, கொள்ளளவு, உள்ளுறுப்பு, சட்டப்பை, கொள்கலன்‌
53.போஏவல்‌, போவென்‌, பறந்திடு, செல்‌
54.இமயன்‌, மந்திரம்‌, காலம்‌, சந்திரன்‌, சிவன்‌, நஞ்சு, நேரம்‌, அசோகமரம்‌, எமன்‌, பிரம்மன்‌
55.மாஅசைச்சொல்‌, அழகு, அழைத்தல்‌, அளவு, அறிவு, ஆணி, இடை, ஒரு மரம்‌, கட்டு, கறுப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம்‌, தாய்‌, துகள்‌, நஞ்சுக்கொடி, நிறம்‌, பரி, பெருமை, மகத்துவம்‌, மரணம்‌, மிகுதி, மேன்மை, வண்டு, வயல்‌, வலி, வெறுப்பு, பெரிய, தாய்‌, செல்வம்‌
56.மீஆகாயம்‌, உயர்ச்சி, மேலிடம்‌, மகிமை, மேலே, வான்‌, மேன்மை, பெருமை
57.மூமூப்பு, மூன்று, மூவேந்தர்‌, அழிவுறு
58.மேமேம்பாடு, அன்பு, விருப்பம்‌, மேன்மை
59.மைகண்மை, குற்றம்‌, இருள்‌, எழு, கருப்பு, செம்மறி ஆடு, நீர்‌, மலடி, மேகம்‌, தீவினை, மதி, மந்திரமை, வண்டினம்‌, கலங்கம்‌, பசுமை, பாவம்‌, அழுக்கு, இளமை, களங்கம்‌, அஞ்சனம்‌
60.மோமோத்தல்‌, மோதல்‌, முகர்தல்‌
61.யாஐயம்‌, இல்லை, யாவை, கட்டுதல்‌, அகலம்‌, ஒருவகை மரம்‌, சந்தேகம்‌
62.வாவருக, வாய்‌, தாவுதல்‌
63.விநிச்சயம்‌, வித்தியாசம்‌, பிரிவு, கொள்திரம்‌, உபசர்க்கம்‌, ஆகாயம்‌, கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு, அறிவு
64.வீமலர்‌, சாவு, கொள்ளுதல்‌, நீக்கம்‌, பறவை, மோதல்‌, விரும்புதல்‌, மகரந்தம்‌, கரு பிரித்தல்‌, பூ, மரணம்‌, மகரந்தம்‌, சோர்வு
65.வேவேவு, ஒற்று
66.நான்கில்‌ ஒரு பங்கு
67.வைகூர்மை, புல்‌, வைக்கோல்‌, வையகம்‌, வைதல்‌, சபித்தல்‌, கொடு
68.வெளவெளவுதல்‌, கெளவுதல்‌, பற்றுதல்‌
Online Printout
Online Printout
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -