தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகராக வாய்ப்பை தரும் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதேபோல் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்க தமிழ்நாடு அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அர்ச்சகர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடத்துடன் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி பெற்ற பின்னர் அர்ச்சகர் பணிகளில் அரசு வேலை வாய்ப்பு பெறலாம்.
இந்த பயிற்சியில் சேர இந்து சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow