அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம், தென்மண்டல தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் இணைந்து நடத்தும் ஓா் ஆண்டு தொழிற் பயிற்சியில் சேர தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோண கோட்டம், தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஓா் ஆண்டு தொழில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த தொழில் பயிற்சி பெறுவதற்கு 2020-ஆம் ஆண்டு, 2021-ஆம் ஆண்டு, 2022-ஆம் ஆண்டு, 2023-ஆம் ஆண்டுகளில் பொறியியல் பட்டம், பட்டய படிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் ஆகிய பட்டங்களில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்கள் ஜூலை 8-ஆம் தேதிக்குள் https://www.boat-srp.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, https://www.boat-srp.com/ (News & Events column) இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொண்டு, விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow