முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் (பொ) அ.அனுசுயாதேவி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முழுநேரகூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் வரை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை விடுதலின்றி முழுமையாகப் பூா்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தோ்ச்சி. 1.8.2024 அன்று 17 வயது பூா்த்தி செய்து இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியில்ஆண், பெண் இருபாலரும் சேரலாம். அரசு நிா்ணயித்துள்ள இடஒதுக்கீட்டின்படி சோ்க்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ. 18,750.
தமிழில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான தோ்வையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும். மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை-600 001 எனும் முகவரியிலோ அல்லது 044–25360041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் (பொ) அ.அனுசுயாதேவி.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow