மாணவர்களுக்கான ஆன்லைன்
திறனறிப் போட்டி
அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான திறனறிவு தேர்வுகள் குறித்த
அறிக்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட
இயக்குனரகம் சார்பில் அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
அனைத்து
அரசு பள்ளிகளில் பயிலும்
9 முதல் 12ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு இந்த
திறனறிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள்
பாடப்புத்தகங்களை தாண்டி
தங்கள் பொது அறிவை
வளர்த்து கொள்ளவும், மாறுபட்ட
கோணத்தில் சிந்திக்கவும் அதிக
வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது. மேலும், மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கு
பெறவும் உதவுகிறது.
CORONA பரவல் காரணமாக அனைத்து
போட்டிகளும் ஆன்லைன் முறையில்
தான் நடத்தப்படும். பள்ளிகள்
அதற்கு தேவையான இணைய
வசதிகளை தயார் செய்து
கொள்ள வேண்டும். அனைத்து
அரசு பள்ளிகளில் பயிலும்
9 முதல் 12ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கான பேச்சுப்
போட்டி, கட்டுரைப் போட்டி
போன்ற போட்டிகள் அனைத்தும்
மாநில அளவில் நடத்தப்பட
உள்ளது.
மாநில
அளவிலான போட்டிகள் அனைத்தும்
வரும் பிப்ரவரி 19ம்
தேதி நடக்க இருக்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தேர்வான சிறந்த
5 மாணவர்கள் பிப்.25-ல்
நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான
போட்டிகளில் பங்கேற்கலாம்.
இதில்
வெற்றி பெறுபவர்களுக்கு செல்போன்,
டேப்லெட், கால்குலேட்டர் உள்ளிட்ட
பரிசுப் பொருட்களுடன், சான்றிதழும் வழங்கப்படும். போட்டிகளை
நடத்துவதற்கு ரூ.24
லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.