தமிழக அரசுக்கல்லூரிகளில் 2381 பணியிடங்கள்–நேர்முகத்தேர்வுக்கு எதிர்ப்பு
கல்லூரி
ஆசிரியர்களுக்கான ப்பணியிடங்களுக்கு நடக்கும் தேர்வில்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும்
நேர்முகத்தேர்வு நடத்த
உள்ள நிலையில் தனியார்
கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளனர்.
தமிழக
உயர்கல்வித்துறை மற்றும்
அரசு கலை கல்லூரிகளில் 2,381 காலிப்பணியிடங்கள் உள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் தகுதியான
ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று
அரசு அறிவித்தது.
அரசு
பணிக்கு விண்ணப்பிக்க தனியார்
கல்லூரி ஆசிரியர்கள் சிரமப்பட்டு அனுபவ சான்றிதழ்களை பெற்றனர்.
இந்நிலையில் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி
வரும் ஆசிரியர்களை நியமிக்க
அரசு முயற்சிப்பதாக தனியார்
கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை, தருமபுரி, வேலூர்
மண்டலங்களில் அரசு
கல்லூரிகளில் கவுரவ
விரிவுரையாளராக 5 ஆண்டுகள்
பணியாற்றியவர்களுக்கு மட்டும்
இன்று சென்னை தரமணியில்
நேர்முகத்தேர்வு நடக்கிறது.
அரசு
கல்லூரிகளில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு
வழங்கப்பட்டால் பல
ஆண்டுகளாக தனியார் கல்லூரியில் பணியாற்றுபவர்களின் நிலை
என்ன ஆவது என்று
கேள்வியை தனியார் கல்லூரி
ஆசிரியர்கள் எழுப்பியுள்ளனர். மேலும்,
தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கும் அரசு வேலை
வாய்ப்பு வழங்க வேண்டும்
என்று வலியுறுத்தியுள்ளனர்.