TAMIL MIXER EDUCATION.ன்
Loan App செய்திகள்
Loan
App.களுக்கான புதிய வழிமுறைகள்
கடன்
செயலிகளுக்கான புதிய
விதிமுறைகளை ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது. அதன்படி,
கடன் வழங்குதல் மற்றும்
திருப்பிச் செலுத்துதல் போன்ற
செயல்பாடுகள் அனைத்தும்
கடன் வாங்கியவரின் வங்கிக்
கணக்கிற்கும் நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே
செயல்படுத்தப்பட வேண்டும்
என்றும், கடன் சேவை
வழங்குநர் அல்லது மூன்றாம்
தரப்பினர் கணக்குகளின் வழியாக
இவை செயல்படுத்தக் கூடாது
என்றும் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல்
கடன் வழங்குநருக்கு செலுத்த
வேண்டிய கட்டணங்களை வங்கிகள்
போன்ற ஒழுங்குமுறைக்குட்ப்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும்
என்றும் கடன் வாங்கியவர் செலுத்த தேவையில்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன்
பெறுபவரின் வெளிப்படையான ஒப்புதல்
இல்லாமல் கடன் வரம்பை
தானாக அதிகரிப்பது தடை
செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன்
பெற்றவர்கள் அசல் மற்றும்
புரொபோஷனேட் வட்டியை அபராதம்
இல்லாமல் செலுத்தி டிஜிட்டல்
கடன்களை விட்டு வெளியேறலாம் என்றும் அதற்கான கூலிங்
ஆப் காலம் கடன்
ஒப்பந்தத்தின் ஒரு
பகுதியாக வழங்கப்படும் என்றும்
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும்,
டிஜிட்டல் கடன் தொடர்பான
புகார்களைக் கையாள்வதற்கு நோடல்
குறை தீர்க்கும் அதிகாரி
இருப்பதை வங்கிகள் அல்லது
நிறுவனங்கள் உறுதி செய்ய
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow