TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு
மட்டுமே
ரூ.2
ஆயிரம்
நிதி
இது குறித்து, தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில்
பிரதம
மந்திரி
கிசான்
சம்மான்
நிதி
திட்டமானது
ஒன்றிய
அரசின்
100 சதவீத
பங்களிப்புடன்
பிப்ரவரி
2019ம்
ஆண்டு
முதல்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு
உதவித்
தொகையாக
விவசாயிகளின்
வங்கிக்
கணக்கில்
நேரடிப்
பணப்பரிமாற்றம்
மூலமாக
வழங்கப்பட்டு
வருகிறது.
அந்தவகையில், இதுவரை 38.24 லட்சம் விவசாயிகளின்
வங்கிக்
கணக்கில்
11 தவணைகளாக
நேரடி
மானியமாக
வரவு
வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஒன்றிய அரசு 12வது தவணைத் தொகை விடுவிப்பதில்
சில
புதிய
வழிமுறைகளை
விதித்துள்ளது.
அதன்படி,
ஆகஸ்ட்
மாதம்
முதல்
விடுவிக்கப்படும்
அனைத்து
தவணைத்
தொகைகளும்
பயனாளியின்
ஆதார்
எண்
அடிப்படையில்
மட்டுமே
நிதி
விடுவிக்கப்படும்
என
தெரிவித்துள்ளது.
எனவே, பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில்
உங்கள்
ஆதார்
எண்ணை
உள்ளீடு
செய்து,
ஆதார்
எண்ணுடன்
இணைக்கப்பட்டுள்ள
கைபேசிக்கு
வரும்
ஓடிபி
பெற்று
அதைப்
பதிவு
செய்து
ஆதார்
எண்ணை
உறுதி
செய்து
கொள்ளலாம்.
அல்லது, அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்த (12 வது) தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு
மட்டுமே
விடுவிக்கப்படும்
என
ஒன்றிய
அரசு
தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை புதுப்பித்து
தொடர்ந்து
பயனடையுமாறு
வேளாண்மை
மற்றும்
உழவர்
நலத்துறை
சார்பாக
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow