புதிய தேசிய
கல்விக்கொள்கை விரைவில்
அமல் – மத்திய அமைச்சர்
21-ஆம்
நூற்றாண்டின் முதல்
கல்விக் கொள்கையை மத்திய
அரசு அறிவித்துள்ளது. கடந்த
1986 ஆம் ஆண்டு முதல்
34 ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த
கல்விக்கொள்கை மாற்றப்பட்டு தற்போது புதிய கல்விக்
கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசு அறிவித்த
இந்த கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
இந்த
திட்டம் மூலமாக கல்வி
வளர்ச்சியில் பெரும்
மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின்
முன்னேற்ற பாதைக்கு அவை
வழிவகுக்கும். இந்த
திட்டம் மூலமாக உயர்படிப்பு பயில மாணவர்களுக்கு 12 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படாமல் அனைத்து கல்லூரிகளிலும் பொது
நுழைவுத் தேர்வு நடத்தி
அதன் மூலமாக தேர்ச்சி
வழங்கப்படும்.
மேலும்
மாணவர்கள் கல்லூரியின் சேர்ந்து
பாதியிலேயே படிப்பை தொடர
முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் சான்றிதழுடன் கல்லூரியில் இருந்து வெளியேறலாம். இது குறித்து
ராஜ்யசபாவில் கேள்வி
எழுப்பப்பட்டது.
அதில்
பதிலளித்த மத்திய கல்வி
அமைச்சர் கூறுகையில்:
மத்திய
அரசு அறிவித்த புதிய
கல்விக் கொள்கை கொரோனா
காரணமாக எந்த காலதாமதமும் ஏற்படாமல் அறிமுகப்படுத்தப்படும். புதிய
கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தப்பட சில நடைமுறைகள் தேவைப்படுகின்றன. அவை
செயல்படுத்தப்பட்ட பின்னர்
அமல்படுத்தப்படும்.